கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 382 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 545,433 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினம் 714 புதிய கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 572,902 ஆக உயர்வடைந்துள்ளது.
தற்சமயம் நாடு முழுவதிலும் உள்ள பல வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 12,855 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம் இலங்கையில் கொவிட் தொற்று தொடர்பாக 14,614 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]