மீண்டும் ஒரு ஐ.நா.சபை அதிகாரி இலங்கை வருகிறார்
ஐக்கிய நாடுகள் சபையின் மற்றும் ஒரு அதிகாரி இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசக் அன்டியாயே எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதியன்று இலங்கைக்கு வரவுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஒக்டோபர் 10ம் திகதி 20ம் திகதி வரை தங்கியிருப்பார் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த காலப்பகுதியில் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்விக்கிரமசிங்க எதிர்க்கட்சி தலைவர் இ.ரா சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும், குடியியல் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது