பஸ் வந்துவிட்டது என்ற பரபரப்பில் அவசரமாக ஏறும்போது, யாழ்ப்பாணம் , அரியாலை என்ற இடத்திலுள்ள பஸ் தரிப்பிடத்தில் கைப்பை தவறி கீழே விழுந்துவிட்டது.
கைப்பையின் உரிமையாளர் கவனிக்கத் தவறிவிட்டார். ஆனால் அந்தவழியாகச் சென்ற தியானேஸ் மதுசன் என்ற இருபத்திரண்டு வயது இளைஞனின் கண்களில் அந்தக் கைப்பை அகப்பட்டுள்ளது.
எடுத்துத் திறந்து பார்த்துள்ளார்.
உள்ளே தாலிக்கொடி உள்ளிட்ட நகைகளைக் கண்டதும் , வெலவெலத்துப் போனவர் அக்கைப்பையை மேலும் ஆராய்ந்து அதனுள் இருந்த உரிமையாளரின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து, விடயத்தைக் கூறியதோடு , கைப்பைக்கு உரியவரின் அறிவுறுத்தலுக்கமைய யாழ்ப்பாண உறவினரிடம் நேரில் சென்று ஒப்படைத்துமுள்ளார்.
அடுத்தவர் பொருளை அடித்துப் பறிக்கும் இன்றைய உலகில்… நேற்றுப் பேருந்தில் இருந்தோர் “பவுண் விற்கிற விலையில எடுத்தவன் தருவானா?” என்று கூறிய கூற்றுக்கெல்லாம் மறுதலையாய் , செயற்பட்ட தியானேஸ் மதுசன் அவர்களைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.