அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு திரை உலகிலிருந்து விலகியிருந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. ‘ கோடியில் ஒருவன்’ பட புகழ் நடிகர் விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார்.
இவர்களுடன் சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாக்கூர், பிரணிதி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டையூ டாமன் என்ற தீவு பகுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது.
தற்போது இந்தப் படத்தில் இடம்பெறும் முக்கியமான வேடத்தில் நடிக்க வைக்க புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்துடன் பட குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கதையையும், கதாபாத்திரத்தையும் கேட்ட விஜயகாந்த் நடிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கேப்டன் விஜயகாந்த் மீண்டும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடிக்கவிருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வந்திருப்பதால், விரைவில் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் படப்பிடிப்பில் பங்குபற்ற கூடும் என தெரியவருகிறது. கேப்டன் விஜயகாந்த் இதற்குமுன் அவரது வாரிசான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான ‘சகாப்தம்’ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]