கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர், இப்பகுதியை சுற்றியுள்ள இடங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், உப்பு நீர் அதிகரிப்பதை கட்டுப்படுத்தவும் துணை புரிவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் எவ்வளவு நீர் சென்றாலும் நிரம்பாத அதிசய கிணறு இருப்பதாக பரவிய தகவலையடுத்து. அதனை பார்க்க ஏராளமானோர் அங்கு குவிந்து வருகின்றனர். இந்த கிணறு நிரம்பியதாக சில வீடியோக்கள் வந்த நிலையில், நிலத்துக்கு சம அளவில் நீர்மட்டம் உயர்ந்துள்ளபோதிலும் தொடர்ந்து தண்ணீரை கிணறு உள்வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த மூன்று வாரங்களாக நல்ல மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக, ஆறு, ஏரி, கால்வாய், குளம் போன்ற நீர்நிலைகள் எல்லாம் நிரம்பியுள்ளன. ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிணறு இந்த தொடர் கனமழையிலும் நிரம்பாமல் ஆச்சரியமளிக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை அடுத்த ஆயன்குளத்தில் இந்த அதிசய கிணறு உள்ளது. கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணையிலிருந்து மழை வெள்ளப்பெருக்கால் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன்படி, 50 கன அடி நீர் இந்த கிணற்றினுள் பாயும்போது கிணறு நிரம்பாமல் உள்ளது. கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர், இப்பகுதியை சுற்றியுள்ள இடங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், உப்பு நீர் அதிகரிப்பதை கட்டுப்படுத்தவும் துணை புரிவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.