பயாகல பொலிஸ் பிரிவில் வடக்கு பயாகல பிரதேசத்தில் வாகனங்கள் பழுதுபார்க்கும் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இலட்சத்து 75,000 பெறுமதியுடைய முச்சக்கர வண்டியை கொள்ளையிட்ட சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 57 வயதுடைய பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டியும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
பயாகல பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]