1990 சுவசரிய ஆம்பியூலன்ஸ் சேவையினூடாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை சமீபத்தில் ஒரு மில்லியனையும் கடந்துள்ளது.
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டிசில்வா கூறுகையில்,
இந்த சேவையில் ஜூலை 2016 முதல் ஒரு மில்லியன் உயிர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதை நான் ஒரு பெரிய விடயமாக கருதுகிறேன். இந்தச் சேவையைத் தொடங்குவதற்கு உறுதுணையாக இருந்த இந்திய அரசுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்த முயற்சியில் எனக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சுமார் 1,500 சுவாசரிய சக உறுப்பினர்கள் இந்த சேவையை மக்களிடம் கொண்டு செல்வதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளனர்.
மேலும் முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஆரம்ப சுகாதார சேவைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் இந்த சேவையில் பங்களிப்புச் செய்தமைக்காக நான் அவர்களை கௌரவிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]