அரச தலைவர் பதவியில் இருந்து பிரிட்டன் மகாராணி எலிசபெத்தை பார்படாஸ் நீக்கியுள்ளது.
இதன் மூலம் செவ்வாயன்று அதன் முதல் ஜனாதிபதியுடன் ஒரு புதிய குடியரசை கரிபியன் தீவான பார்படாஸ் உருவாக்கியுள்ளது.
கரீபியன் தீவுக்கு முதல் ஆங்கிலக் கப்பல்கள் வந்து ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் கடைசி எஞ்சிய காலனித்துவ பிணைப்புகளை பார்படாஸ் துண்டித்துள்ளது.
தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள சேம்பர்லைன் பாலத்தில் நூற்றுக்கணக்கான மக்களின் ஆரவாரத்துடன் செவ்வாய் நள்ளிரவு புதிய குடியரசு பிறந்தது.
கூட்ட நெரிசலான ஹீரோஸ் சதுக்கத்தில் பார்படாஸின் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது 21 துப்பாக்கி தோட்டாக்கள் சுடப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.
பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஜமைக்கா உள்ளிட்ட 15 பிற நாடுகளுக்கும் இன்னும் ராணியாக இருக்கும் இரண்டாம் எலிசபெத் இன் காலனித்துவ வரலாற்றினை முறித்துக் கொண்ட இறுதி நாடாக பார்படாஸ் மாறியது.
பார்பேடியன் நடனம் மற்றும் இசையின் திகைப்பூட்டும் காட்சிக்குப் பிறகு, காலனித்துவத்தின் முடிவைக் கொண்டாடும் உரைகளுடன், முதல் ஜனாதிபதியாக சாண்ட்ரா மேசன் பதவியேற்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]