வவுனியா ஓமந்தை கமநல சேவைகள் நிலையத்திற்கு உட்பட்ட செட்டியூர்குளம் நேற்று (29) மாலை உடைப்பெடுத்துள்ளது.
மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்தமையால் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத குளம் உடைப்பெடுத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
சுமார் 50 ஏக்கரில் குறித்த குளத்தை நம்பி விவசாயம் செய்யப்படும் நிலையில் குளம் உடைப்பெடுத்தமையானது விவசாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்த விவசாயிகள், கமக்காரர் அமைப்பின் நிதியில் இருந்து உடைப்பெடுத்த பகுதியை செப்பனிடுவதாக தெரிவித்ததுடன் குறித்த குளத்தில் வேறு பகுதிகளிலும் உடைப்பெடுக்கும் நிலை உள்ளதாகவும் தெரிவித்தனர்.
குறித்த பகுதிக்கு இராணுவத்தினரும் வருகை தந்து குளம் செப்பனிடல் பணியை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]