உலக சுகாதார அமைப்பு புதிய வகை கொரோனா வைரஸ்ஸான ஒமிக்ரோன் மாறுபாட்டை ‘கவலைக்குரியது’ என அறிவித்துள்ளது.
அத்துடன் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில், விஞ்ஞானிகள் கிரேக்க எழுத்தான ‘ஒமிக்ரோன்’ என்பதை இந்த புதிய வகை கொரோனா வைரசுக்கு பெயராக சூட்டியுள்ளனர் மற்றும் புதிய மாறுபாட்டின் தாக்கத்தை புரிந்துகொள்ள சில வாரங்கள் ஆகும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இது 5 ஆவது கொரோனா வைரஸ் மாறுப்படாகும்.
தற்போது விஞ்ஞானிகள் இவ் வைலரஸானது இது எவ்வாறு பரவுகிறது என்பதை தீர்மானிக்க ஆய்வுகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இது முதன் முதலில் தென்னாபிரிக்காவின் போஸ்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து நவம்பர் 24 திகதி அன்று உலக சுகாதார அமைப்புக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது எனவும், இவ் வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டது எனவும் ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.
தற்போது இவ் வைலரஸானது போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹொங்ஹொங் மற்றும் இஸ்ரேலிலும் கண்டறியப்பட்டது.
தென் ஆப்பிரிக்காவில் 6 பேர், போட்ஸ்வானாவில் 3 பேர், ஹொங்ஹொங் மற்றும் இஸ்ரேலில் தலா ஒருவர் என இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இவ் புதிய வகை கொரோனா வைரஸ் மாறுபாடு பெரும்பாலும் இளைஞர்களிடையே கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதோடு பாரிய சவாலாகவும் அமைந்துள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கை சுகாதார நிபுணர்கள் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை எல்லைகளில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் புதிய மாறுபாடு குறித்து தீவிர கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் இந்த புதிய மாறுபாட்டிற்கான தரவு இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், அனைத்து உலக நாடுகளுக்கும் இது ஒரு மோசமான செய்தி ஆகும். என்பதில் ஜயமில்லை.
தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, லெசோதோ, சுவாசிலாந்து, சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு சனிக்கிழமை நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து குடிமக்களும் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் செயல்படுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தரவுகளின் அடிப்படையில் இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 562,059 ஆகவும் இறந்தவர்களின் எண்ணிக்கை 14,278 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்நிலையை கட்டுப்படுத்த வேண்டிய தேவை சகலருக்கும் காணப்படுகிறது. குறிப்பாக இவ் வருட ஆரம்பத்தில் இருந்து தடுப்பூசி செயற்பாடுகள் மிக வேகமாக முன்னேடுக்கப்பட்டன. இதனுடாக வைரஸ் பரவல் சற்று குறைவடைந்ததுடன் நாட்டின் அன்றாட ஏனைய செயற்பாடுகள் வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளன,
எனினும் இந்த புதிய வைரஸ் இணங்காணப்பட்டுள்ள நிலையில் இதனை கருத்திற்கொண்டு நாம் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியது எமது கடமையாகும். காரணம், இலங்கையினால் இன்னுமொரு முடக்கத்தை எக்காரணம் கொண்டும் தாங்கிக்கொள்ள முடியாது.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நாடு 3 தடவைகள் முடக்கப்பட்டன இதன் அடிப்படையில் நாடு பாரிய பொருளாதார சிக்கலையும் ஏனைய நெருக்கடியையும் எதிர் கொண்டது.
எனவே பொருளாதாரத்தை தொடர்ந்து இயங்க செய்வது அவசியமாகும்.
எனவே நாட்டை வழமைப்போல் இயங்க செய்யும் வகையில் எல்லாம் தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மேலும் தொற்றை முற்றாக அழித்து விடுவதற்கு எல்லோரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
அத்துடன் சகலரும் சுகாதார வழிக்காட்டலையும் அறிவுறுத்தலையும் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும். நாம் சமூக அக்கறையுடன் செயற்படும் பட்சத்தில் இந்த வைரசை முற்றாக ஒழித்து விடலாம்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]