மட்டக்களப்பு – கிராண் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடாத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கல்குடா பொலிசாரினால் கடந்த மார்கழி 27 ஆம் திகதி இரு பெண்கள் உட்பட்ட 10 பேர் கைது செய்யப்பட்ட வழக்கு இன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்டது.
வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் இவ் வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்றைய தினம் சந்தேகநபர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படாத காரணத்தால் இணைய வழி மூலம் அடுத்த மாதம் 09 திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]