மட்டக்களப்பு நீதிமன்ற எல்லைக்குள் யுத்தத்தினால் மரணித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவு கூருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட 5 பேருக்கு கடந்த 19 ம் திகதியில் இருந்து எதிர்வரும் 27ம் திகதி இரவு வரை நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்து கட்டளை ஒன்றை வழங்கியுள்ளது.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் ஒன்றிணைப்பின் கிழக்கு மாகாண தலைவர் சிவயோகநாதன் சீலன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ். முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். ஞானமுத்து சிறிநேசன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் யோகராசா தர்மிதன், என்பவர்களுடைய தலைமையில் அவர்களுடன் அவர்கள்சார்ந்த உறுப்பினர்களால் தடை செய்யப்பட்ட தமிழீழ் விடுதலைப் புலிகளின் அமைப்பில் மரணித்தவர்களுக்கு விளக்கேற்றி நினைவு கூர இருப்பதாக நம்பகரமான தகவலின் பிரகாரம் இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதுடன் மீண்டும் தூண்டுகின்ற செயற்பாடு காணப்படுவதால் இந்த நினைவு கூரல் சம்பவம் நடைபெறாமல் தடை உத்தரவு ஒன்றை மேற்குறித்தவர்களுக்கும் அவர்கள் சார்ந்த உறுப்பினர்களுக்கும் எதிராக 1979 ம் ஆண்டின் 15 ம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்ட கோவை (106)1, (106)2, பிரிவின் கீழ் தடை உத்தரவு ஒன்றை கோரி மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பி.கே.பி. கெட்டியாராச்சி நீதிமன்றில் சமர்பித்தார்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் கடந்த மேற்குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக கடந்த 19 ஆம் திகதியில் இருந்து 27 ம் திகதி வரை இந்த நினைவேந்தலில் ஈடுபட தடை உத்தரவு பிறப்பித்து கட்டளை ஒன்றை வழங்கியுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]