அம்பாறை, வரிபத்தாஞ்சேனை பகுதியில் ‘கஜமுத்து’ எனப்படும் யானை தந்தத்திலிருந்து பெறப்படும் முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 10 கஜமுத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு இணங்க இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் குறித்த யானை முத்துக்களை சுமார் 10 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதான நபர்களும், கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக இறக்காமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]