பாகிஸ்தானில் ஒரே நாளில் 269 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதோடு , 9 பேர் மரணித்துள்ளார்கள்.
இந்நிலையில், பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சலால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
சிந்து மாகாணத்தில் ஒரே இரவில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 78 பேரில் 48 பேர் கராச்சி நகரத்தை சேந்தவர்களாவர்.
மேலும், ஐதராபாத்தில் 16 பேரும், உமர்கோட்டில் ஒன்பது பேரும், தர்பார்க்கரில் 3 பேரும் மற்றும் மாட்டியாரில் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சமீபத்திய மரணங்கள் சிந்து மாகாணத்தில் மாவட்டத்தின் மத்திய நகர், கோரங்கி மற்றும் மாலிர் இடம்பெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை கராச்சியைச் சேர்ந்த டெங்குவால் பாதிக்கப்பட்ட மூன்று பேரும், பஞ்சாப்பைச் சேர்ந்த ஆறு பேரும் மரணித்துள்ளார்கள்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]