மாவோயிஸ்டு அமைப்பின் உயர் தலைவர் பிரசாந்த் போஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ரெயில் தண்டவாளங்களை குண்டு வைத்து தகர்த்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு சிங்பம் மாவட்டத்தில் சோனுவா, லோதபகர் ரெயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று இரவு தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்த்தனர். இதேபோல் லதேகர் மாவட்டம் ரிச்சுகுடா-தேமு ரெயில் நிலையங்களுக்கு மத்தியில் நள்ளிரவில் தண்டவாளத்தை தகர்த்துள்ளனர்.
இந்த தாக்குதல் காரணமாக அந்த வழித்தடங்களில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ஒரு சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அப்பகுதியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
மாவோயிஸ்டு அமைப்பின் உயர் தலைவர் பிரசாந்த் போஸ் என்ற கிஷன் தா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாவோயிஸ்டு அமைப்பு நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா, சத்திஸ்கர், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நடந்த 100க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்களின் மூளையாக போஸ் செயல்பட்டிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]