இந்த குறிப்பிட்ட பகுதி சந்திர கிரகணம் 3 மணி நேரம் 28 நிமிடங்கள் 24 வினாடிகள் நீளமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதன்படி 580 ஆண்டுகளில் மிக நீண்ட பகுதி சந்திர கிரகணம் நவம்பர் 19 வெள்ளிக்கிழமை நிகழும், நிலவின் 97 சதவீதம் பூமியின் நிழலால் மூடப்பட்டிருக்கும் என்பதால், இது பகுதி சந்திர கிரகணம் எனப்படுகிறது.
இறுதியாக இது போன்ற சந்திர கிரகணம் 1440 பெப்ரவரி 18 அன்று ஏற்பட்டது,
மேலும் இதுபோன்ற மற்றொரு நிகழ்வினை காண 2669 பெப்ரவரி 8 ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டும் என்றும் வானியல் ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.
இலங்கை நேரப்படி சந்திர கிரகணம் மதியம் 12.48 மணிக்கு தொடங்கி மாலை 4.17 மணிக்கு முடிவடையும் என்று கூறப்படுகிறது.
இது மதியம் 2.34 மணிக்கு உச்சத்தை எட்டும்.
இந்த பகுதி சந்திர கிரகணம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் பசுபிக் பகுதிகளிலும் தெரியும்.
அது தவிர பிற்பகல் 2.34 மணிக்கு அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமில் உள்ள சில பகுதிகளில் இருந்து இந்த அரிய நிகழ்வை பார்க்க முடியும் என்று இந்திய வானியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]