அன்னம் எனும் உணவு ஒருவருக்கு வாழ்நாள் முழுக்க தங்கு, தடையில்லாமல் கிடைக்க அருள் புரியும் தெய்வம் ஸ்ரீ அன்னபூரணி தேவி. அந்த அன்னபூரணி தேவியின் அருளை தருகின்ற அன்னபூரணி மூல மந்திரம் இதோ.
ஓம் ஐம் ஹ்ரீம் ஷ்ரீம் க்ளீம் அன்னபூர்ணாய நமஹ
நாம் உண்ணும் உணவிற்கு கடவுளாக இருப்பவர் அன்னபூரணி என்பதால் மேற்சொன்ன அன்னபூரணி மூல மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை துதிப்பது நல்லது.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அன்னபூரணி தேவிக்கு காலையில் சமைத்த உணவு சிறிதை நைவேத்தியம் வைத்து அன்னபூரணி மூல மந்திரத்தை 108 முதல் 1008 முறை வரை துதித்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் என்றென்றும் உணவிற்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் இருக்கின்ற தரித்திர நிலை முற்றிலும் நீங்கும்.
பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் திருமணம் தடை தாமதங்களுக்கு ஆளாகின்ற ஆண்களுக்கும், பெண்களுக்கும் விரைவில் திருமணம் நடக்கும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]