நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படவுள்ளது.
அரச பாடசாலைகளில் இதுவரை ஆரம்பிக்கப்படாத அனைத்து தரங்களையும் அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பிக்க முடியும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மற்றும் பிற அமைச்சின் அதிகாரிகளுடன் சுகாதாரப் பரிந்துரைகளுக்கு இணங்க, அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் தரம் 6-7-8-9 இன் கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 22, 2021 திங்கட்கிழமை தொடங்கும்.
கல்வி அமைச்சின் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.
கொவிட்-19 சூழ்நிலையால் நிறுத்தப்பட்டிருந்த பாடசாலை கல்வி நடவடிக்கைகள் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளின் பேரில் நான்கு கட்டங்களாக மீண்டும் திறக்கப்பட்டது.
முதற்கட்டமாக 200 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப தரம், இரண்டாம் கட்டத்தின் கீழ் அனைத்து பாடசாலைகளின் ஆரம்ப தரம், மூன்றாம் கட்டத்தின் கீழ் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர தரங்களும் ஆரம்பிக்கப்பட்டன.
நான்காம் கட்டத்தின் கீழ் உள்ள சகல பாடசாலைகளிலும் அனைத்து வகுப்புகளும் எதிர்வரும் வரும் திங்கட்கிழமை முதல் தொடங்கும்.
அதன்படி நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் 2021 நவம்பர் 22 திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]