இலங்கையில் போர்க்குற்றம் புரிந்த பான் கீ மூனின் மருமகன்!
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் மருமகனான முன்னாள் மேஜர் சித்தார்த் சட்டர்ஜி இலங்கையில் போர் குற்றம் இழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு இலங்கையில் நிலைக்கொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படையில் சேவையாற்றிய மேஜர் சட்டர்ஜி, கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் சடலங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக அமெரிக்காவின் இன்னர் சிட்டி பிரஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
பான் கீ மூனின் மருமகனான சட்டர்ஜி, கென்யாவுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பதவிக்காக அண்மையில் நியமிக்கப்பட்டார்.
யாழ்ப்பாண வைத்தியசாலையின் மருத்துவர்களை கொலை செய்தமை தொடர்பிலும் சட்டர்ஜி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாண வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய படையினர் வைத்தியர்கள் உட்பட 60 பேரை சுட்டுக்கொன்றனர்.