நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சோமாலியா தரத்திலான வரவு செலவுத்திட்டம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) விமர்சித்துள்ளார்.
நாட்டு மக்கள் முற்போக்கான வரவு செலவுத்திட்டத்தை எதிர்பார்த்தனர். எனினும் கிடைத்தது வெற்று பாத்திரம். மக்கள் நலன் சார்ந்த வரவு செலவுத்திட்டத்தை மக்கள் எதிர்பார்த்தனர். எனினும் கிடைத்தது புஷ்வாணம்.
வரவு செலவுத்திட்டத்தில் எந்த வியூகங்களும் இல்லை. வரவு செலவுத்திட்டத்தில் துண்டு விழும் தொகையை குறைக்க எந்த திட்டங்களும் இல்லை. வாழ்க்கை செலவு, பணவீக்கத்தை குறைக்கும் வேலைத்திட்டங்கள் இல்லை.
மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் இல்லை. விவசாயிகளை முன்னேற்றும் எந்த முறைகளும் இல்லை. வருமானத்தை பெருக்கும் வழிமுறைகள் இல்லை. சுருக்கமாக கூறுவதென்றால் இது சோமாலிய தரத்திலான வரவு செலவுத்திட்டம். ம
க்களை ஏமாற்றிய வரவு செலவுத்திட்டம். குறுகிய, மத்திய, நீண்டகால வேலைத்திட்டங்கள் இல்லாத வெற்று ஆவணம். அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு எவ்விதமாக சம்பள அதிகரிக்கும் வழங்கவில்லை. இது மக்களை மறந்து விட்டு, தமது சகாக்களின் தேவைக்கு அமைய உருவாக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]