நாட்டில் தற்போது குறிப்பிட்ட சில இடங்களில் மாத்திரம் கொவிட் தொற்று இனங்காணப்படவில்லை.
நாடளாவிய ரீதியில் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தற்போது குறிப்பிட்ட சில இடங்களில் மாத்திரமே கொவிட் தொற்று காணப்படுவதாகக் கூற முடியாது. நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலிருந்தும் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.
கொவிட் பரவல் என்பது மக்களின் உயிருடன் தொடர்புடைய விடயம் என்பதால் அனைவரும் சிந்தித்து மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.
திருமண நிகழ்வானாலும் , வேறு எந்தவொரு நிகழ்வானாலும் கொவிட் இலகுவாகப் பரவக் கூடிய மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள் அனைத்தையும் தற்போது தவிர்த்துக் கொள்வதே பொறுத்தமானது.
எவ்வாறிருப்பினும் மீண்டுமொரு கொவிட் பரவல் அலை ஏற்பட்டாலும், அதன் போது தொற்று தீவிரமடைவதைத் தவிர்ப்பதற்காக இப்போதிலிருந்தே தயாராக வேண்டும் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]