இந்தியாவின் பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு சம்பாரண், கோபால்கஞ்ச், சமஸ்திபூர் மற்றும் முசாபர்பூர் மாவட்டங்களிலேயே இந்த உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனால் பீகார் பொலிஸ் துறை இதுவரை 800 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை கைது செய்துள்ளது.
அதேநேரம் மாநிலம் முழுவதும் நடத்திய சோதனையில் 20,000 லிற்றர் கள்ளச்சாராயங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இதனிடையே நவம்பர் 16 ஆம் திகதி மதுவிலக்கு குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும் என்றும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் முன்னதாக தெரிவித்திருந்தார்.
அவரது இந்த அறிவிப்பு வெளியான சற்று நேரத்திலே பீகார் பொலிஸார் இந்த அதிரடி சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]