புலம்பெயர் தமிழர்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய சிங்கள வாலிபர்
ஜெறோம் டி சில்வா அல்லது நிர்மன் டி செல்வா என்ற ஒருவர் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் அவரை பிரான்ஸ் மற்றும் சுவிஸ் பொலிஸார் தேடி வருகின்றனர்.
சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சுவிஸ் நாட்டில் போலியான ஒரு கடல் உணவு நிறுவனத்தினை இவர் தொடங்கி பல வருடங்களாக சாதுரியமாக ஏமாற்றி வந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலருந்து ஐரோப்பாவிற்கு உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்வதாகவும் கூறிய போது பல புலம்பெயர் தமிழர்கள் இவரிடம் பல கோடி ரூபாய் பணத்தினை கொடுத்து ஏமாந்துள்ளனர்.
அத்துடன், சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டினரும் கூட இவரது மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர் சரளமாக நான்கு மொழிகளில் பேசக்கூடியவர்.
இதனை வைத்து இவர் பலரை ஏமாற்றியது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களிடம் மோசடி செய்த பணத்தில் இவர் உல்லாசமாக ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று மறைந்து வாழ்ந்து வருகிறார்.
மேலும் இவரை இலங்கை பொலிஸாரும் தேடி வருகின்றனர். எனவே புலம்பெயர் நாடுகளிலுள்ள எமது உறவுகள் விழிப்புடன் இருக்குமாறு அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.