சிறிய கட்டங்கள் போட்ட அடர்த்தியான நிறமுள்ள பேண்ட்டிற்கு வெள்ளை நிற முழுக்கை சட்டை அணியும் பொழுது அவை அணிபவருக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருக்கும்.
ஷேர்வானி, கோட்சூட், பிளேஸர்ஸ் – இவை மட்டுமே ஆளுமை தரும் ஆடைகள் என்று நீங்கள் நினைத்தால் அந்த எண்ணத்தை இப்பொழுது முதல் மாற்றிக் கொள்ளலாம். ஆம், ஆடவர்கள் அணியும் பேன்ட் மற்றும் ஷர்ட்டுகளும் அணியும் விதத்தில் அணியும் பொழுது அது ஆளுமையைத் தரும் ஆடையாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
* காண்ட்ராஸ்ட் நிறத்தில் அணியப்படும் பேன்ட்டும் ஷர்ட்டும் மிகவும் கம்பீரமாகவும் அதே சமயம் ட்ரெண்டியாகவும் இருக்கும். பொதுவாகவே மென்மையான பிங்க் நிறச்சட்டைக்கு அடர்த்தியான நீல நிறப்பேண்ட் அணியும் பொழுது அது அணிபவருக்கு முறையான தோற்றத்தைத் (ஃபார்மல் லுக்) தரும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
* சிறிய கட்டங்கள் போட்ட அடர்த்தியான நிறமுள்ள பேண்ட்டிற்கு வெள்ளை நிற முழுக்கை சட்டை அணியும் பொழுது அவை அணிபவருக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருக்கும்.
* மிகவும் மென்மையான நிறமுடைய பேண்டிற்கு அடர்த்தியான வண்ணங்களில் அணியப்படும் சட்டைகள் பொருத்தமானதாக இருக்கும். இவை அலுவலகத்திற்கு மட்டுமல்லாது விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் ஏற்ற ஆடையாக இருக்கும்.
* மென்மையான கிரே நிறமுடைய பேண்ட்டிற்கு மிகவும் பொருத்தமானது கருப்பு நிறமுடைய சட்டை என்றால் அது நூற்றுக்கு நூறு பொருந்தும். இது போன்ற சேர்க்கையில் பேண்ட் ஷர்ட் அணியும் பொழுது ஷர்ட்டிலிருக்கும் பொத்தான் வெண்ணை நிறத்தில் இருந்தால் அது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இருக்கும். இரவு நேர நிகழ்ச்சிகளுக்கு இவற்றை அணியும் பொழுது தனித்துவமாக தெரிவோம் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
* ஃபார்மல் பேன்ட்டிற்கு ஷர்ட், டி-ஷர்ட் மற்றும் போலோவை அணிவது டிரெண்டியிலும் டிரெண்டியாக உள்ளது.
* வேஷ்டிக்கு ஜிப்பா அல்லது குர்த்தா அணிவதும் ஸ்டைலாகவும் கம்பீரமாகவும் இருக்கும். தென்னிந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமாக வேஷ்டி சட்டையைச் சொல்லலாம். வேஷ்டி அணியும் பொழுது வேஷ்டியின் கரையானது வலதுபுறமாக இருக்க வேண்டும். அதேபோல் கணுக்காலுக்கு மேலே வேஷ்டி இருந்தால் அது அழகான தோற்றத்தைத் தராது. லெதர் ஷூ அல்லது ஸ்னீக்கரை வேஷ்டி அணியும் பொழுது போட்டுக் கொண்டால் அது ஆண்களின் ஆளுமையை அட்டகாசமாக வெளிப்படுத்தும்.
* பேண்ட் ஷர்ட் அணியும் பொழுது எதை செய்யக்கூடாது? எதைச் செய்யலாம்? என்பதை தெரிந்து கொண்டு திருத்தமாக அணியும் பொழுது அவை ஆளுமை தோற்றத்தைத் தரும் என்பதை உறுதியாக நம்பலாம்.
* டை அணியும் நேரம் தவிர ஷரட்டின் மேல் பட்டனை போடாமல் இருப்பது அழகான கேஷூவலான தோற்றத்தைத் தருவதாக இருக்கும்.
* அதே போல் கூலர்ஸ்களை தலையில் அணிவதை விட ஷர்ட்டில் தொங்க விடுவது பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக இருக்கும்.
* டையானது பேண்ட்டின் பெல்ட் நுனியை தொட்டவாறு இருக்க வேண்டும். பேண்ட்டின் மேலோ அல்லது கீழோ தொங்குவது ஆளுமைத் தோற்றத்தைத் தருவதாக இருக்காது.
* ஃபார்மல் உடைகளில் பெல்ட் மற்றும் ஷூஸ் மேட்ச்சாக அணியும் பொழுது அவை அட்டகாசமாக கெத்தான தோற்றத்தைத் தரும்.
* நம் உடல் வாகுக்கு ஏற்றாற்போல் உடை அணிவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
* அதே போல் நிகழ்வுக்கு ஏற்றாற் போன்ற ஆடைகளை அணிவதும் அணிபவருக்கு ஆளுமை மற்றும் தன்னம்பிக்கையை கூட்டும்.
* ஆயத்த ஆடையோ அல்லது வாங்கித் தைக்கும் ஆடையோ எதுவாக இருந்தாலும் நம் உடலுக்கு கனக்கச்சிதமாக பொருந்தும் ஆடைகளை அணிவதும் மிகவும் உற்றுநோக்க வேண்டிய ஒன்றாகும்.
* நாகரீகமான ஆடை என்பதற்காக நமக்கு பொருத்தமில்லாத ஆடையை அணிவது மிகவும் தவறான தேர்வாகும்.
* ஜீன்ஸ் பேண்ட்டுகளைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அவற்றுடன் நேர்த்தியான ஜாக்கெட்டுகளை அணிவதும் கிளாசிக்கான தோற்றத்தை நிச்சயம் தரும் என்று நம்பலாம்.
* சரியான உடைகளுக்கு சரியான பாதணிகள், கைக்கடிகாரம் போன்றவற்றை தேர்ந்தெடுத்து அணிவது கட்டாயம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
பேண்ட், சட்டை அணிவதிலும் இத்தனை விஷயங்கள் உள்ளதா என்பது தெரிந்து கொண்ட யாரும் ஆண்களுக்கென்ன ஒரு சட்டையையும் பேன்ட்டையும் போட்டால் நிமிஷத்தில் தயாராகி விடலாம் என்று இனிமேல் சொல்ல மாட்டார்கள். ‘ஆள் பாதி ஆடை பாதி’யை சிறிதே மாற்றி ‘ஆள் பாதி ஆளுமை பாதி’ என்று சொல்லுமளவுக்கு நாம் அணியும் ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவது மிகவும் அவசியமாகும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]