இன்றைய திகதியில் ஏராளமான இளம் தாய்மார்கள் மகப்பேறு மருத்துவ நிபுணர்களிடம் தங்களுடைய பச்சிளம் குழந்தைகளுக்கு பேபி வைஃப்ஸை பயன்படுத்தலாமா? என கேட்கிறார்கள்.
பொதுவாக எம்மில் பலரும் தங்களின் சௌகரியம் மற்றும் வசதியின் காரணமாகவே வைஃப்ஸை பயன்படுத்துகிறார்கள். பச்சிளம் குழந்தைகள் சிறுநீர் கழித்த பிறகும், மலம் கழித்த பிறகும் அவற்றை சுத்தம் செய்ய வைஃப்ஸை பலர் பயன்படுத்தி வருகின்றனர்.
வேறு சிலர் மூணு மணி நேரத்திற்கு ஒரு முறை பச்சிளங் குழந்தைகளுக்கு பொருத்தப்பட்ட டயாபரை மாற்றும்போது, பிரத்யேக பேபி வைஃப்ஸை பயன்படுத்தி சுத்தப்படுத்திய பிறகு, மீண்டும் புதிய டயாப்பரை அணிவிக்கிறார்கள்.
பொதுவாக கடந்த தசாப்தங்களில் நறுமணம் வீசும் இத்தகைய வைஃப்ஸில் ரசாயனங்கள் இணைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக இதனைப் பயன்படுத்தும் போது தோலில் ஒவ்வாமை ஏற்பட்டு, பல பிரச்சனைகள் உண்டாகின.
பின்னர் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட வைஃப்ஸில் தற்போது புதிய மருத்துவத் தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடிய ரசாயனங்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, தோலுக்கு எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தாத வைப்ஸ்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இத்தகைய வைஃப்ஸ்கள் சற்று திரவ தன்மை கொண்டதால் இதனை பாதுகாப்பதும், பராமரிப்பதும் முக்கியம். இதனைப் பேணி பாதுகாப்பதில் அலட்சியம் ஏற்பட்டால், இதில் பாக்டீரியா தொற்றுகள் மற்றும் பாக்டீரியா கிருமிகள் உண்டாகி அவை குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எம்மில் பலரும் சந்தையில் கிடைக்கும் தரமான வைஃப்ஸ்களின் விலை கூடுதல் என்பதால், அதனை வாங்கி குழந்தையின் சிறுநீர் மற்றும் மலம் கழித்த இடத்தை தவறான முறையில் சுத்தப்படுத்துவதால், பாக்டீரியாக்கள் பரவக்கூடிய சாத்தியக்கூறும் உண்டு.
பச்சிளங்குழந்தைகளுக்கு பயன்படுத்திய வைஃப்ஸை வெளியேற்றும் போது அதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாகும். இத்தகைய காரணங்களால் வைஃப்ஸ்களை பெரும்பாலும் தவிர்க்க முடியாத தருணங்களிலோ அல்லது பயண தருணங்களிலோ பயன்படுத்துவதே சிறந்தது என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அனுஷா
டொக்டர் ஸ்ரீதேவி
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]