ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேபாளப் பிரதமர் ஷேர் பகதூர் டியூபாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஸ்கொட்லாந்தின், கிளாஸ்கோ நகரில் நடைபெறும் COP-26 காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை ஆழப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.
கல்வித் துறையில் ஒத்துழைப்பைப் பரிமாறிக்கொள்வது மற்றும் இருதரப்பு கலாச்சாரத்தை வலுப்படுத்துவது தொடர்பான விவகாரங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் இரு நாடுகளிலும் சுற்றுலாவை மேம்படுத்துதல் மற்றும் உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் உயர் மட்டத்தில் உரையாடல் தொடர்வது தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.
ஒக்டோபர் 31 ஆம் திகதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் தொடங்கிய COP-26 மாநாடு நவம்பர் 12 வரை தொடரும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]