அண்மையில் ‘திங்கள் நட்பு வட்டம் (Monday friends group)’ துவக்க நிகழ்வு இடம்பெற்றது. கனடாவில் பல்வேறு தொழில்கள் மற்றும் செயற்பாடுகளில் ஈடுபடும் புலம்பெயர் தாயக உறவுகளின் ஒன்றுகூடலாக இந்த அமைப்பு கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
இயந்திரத்தனமான தொழில் உலகில் பல்வேறு நெருக்களின் மத்தியில் ஓடி அலையும் உறவுகள் வாரத்தில் ஒரு நாள் திங்கட்கிழமை ஒன்றில் வாரம் தோறும் ஒவ்வொரு புதிய இடங்களிலும் சந்தித்து தமது அனுபவங்களையும் பயணங்களையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இவ் நட்பு வட்டம் உருவாக்கப்பட்டது.
சிறப்பான இடங்களில் சந்தித்து ஒன்றாக உணவருந்தி, சந்தோசங்களைப் பகிர்ந்து, வேலை அனுபவங்களை பகிர்ந்து, முயற்சிகளை கூர்மைப்படுத்தி முன்னேற்றங்களை ஏற்படுத்துதல் இதன் எதிர்பார்ப்புகளாகும்.
புதிய இடம், புதிய உணவு, புதிய உறவு, புதிய முயற்சிகள் என வியாபாரத்தையும் வாழ்வையும் முன்னேற்றும் திங்கள் நட்பு வட்டத்தில் விரும்பிய நண்பர்கள் எவரும் இணைந்துகொள்ள முடியும்.
கிருபா பிள்ளை
தொடர்புகளுக்கு: 0014164145562
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]