இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை பொலிஸ் ஆகியவற்றின் ஒன்றிணைந்த ரக்பி குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘வோரியர்’ கிண்ண ரக்பி செவன்ஸ் தொடரில் விமானப்படை ஏ அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடைபெற்ற இப்போட்டித் தொடரில் இலங்கை இராணுவத்தின் ஏ மற்றும் பீ அணிகள், இலங்கை கடற்படையின் ஏ மற்றும் பீ அணிகள் , இலங்கை விமானப்படையின் ஏ மற்றும் பீ அணிகள் , இலங்கை பொலிஸ் ஏ மற்றும் பீ அணிகள் மற்றும் சீ.எச். அண்ட் எப்.சீ. அணியும் ஹெவ்லொக்ஸ் அணி என மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றிருந்தன.
கொழும்பு ‘பொலிஸ் பார்க்’ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை விமானப் படையின் ஏ அணியும், இலங்கை பொலிஸின் ஏ அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தன.
இப்போட்டியில் தனது முழுமையான ஆதிக்கத்தை செலுத்திய இலங்கை விமானப்படை ‘ஏ ‘ அணி 24 க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை பொலிஸ் ‘ஏ’ அணியை வீழ்த்தியது.
சம்பியன் பட்டம் வென்ற இலங்கை விமானப் படை ஏ அணிக்கு சம்பியன் கிண்ணத்துடன் 250,000 ரூபா பணப்பரிசும் கிடைத்தது. இரண்டாம் இடம் பெற்ற இலங்கை பொலிஸ் ‘ஏ’ அணிக்கு 150,000 ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. இப்போட்டித் தொடரின் சிறந்த வீரருக்குரிய விருதை இலங்கை விமானப்படை ஏ அணியின் நுவன் பெரேரா வென்றார்.
கொரோனா வரைஸ் பரவல் காரணமாக ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் ரக்பி போட்டித் தொடரொன்று இலங்கையில் நடைபெற்றமை இதுவே முதல் தடவையாகும்.
எதிர்வரும் நவம்பர் மாதத்தின் இறுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்படவுள்ள ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டித் தொடரில் இலங்கை ரக்பி அணி பங்கேற்கவுள்ளது.
ஆகையால், ‘இலங்கை ரக்பி குழாத்துக்கு வீரர்களை தெரிவு செய்யப்படுவதற்காகவே, வோரியர்’ ரக்பி கிண்ணத் தொடரை இலங்கை ரக்பி சம்மேளனம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]