தமிழ் வருடங்கள் அறுபதையும் படிகளாகக் கொண்ட படைவீடு ‘சுவாமிமலை.’ தந்தை – மகன் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தரிசிக்க வேண்டிய ஆலயம் இதுவாகும்.
சூரபத்மனை வென்ற பிறகு, முருகப்பெருமான் சினம் தணிந்து அமர்ந்த இடம் ‘திருத்தணி.’ சினம்கொண்டவர்கள் குணம் மாறவும், சிநேகம் கொள்ளவும், செல்ல வேண்டிய இடம் திருத்தணியாகும்.
தமிழ் வருடங்கள் அறுபதையும் படிகளாகக் கொண்ட படைவீடு ‘சுவாமிமலை.’ தந்தை – மகன் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தரிசிக்க வேண்டிய ஆலயம் இதுவாகும்.
சூரசம்ஹாரம் நடந்த இடம் ‘திருச்செந்தூர்.’ மறைமுக எதிர்ப்புகள் அகல, செல்ல வேண்டிய இடம் இந்த திருத்தலமாகும்.
ஆண்டியையும் அரசனாக மாற்றுவேன் என்று தெரிவித்து, முருகப்பெருமான் அமர்ந்த இடம் ‘பழநி.’ எனவே பணத்தேவைகள் பூர்த்தியாக இந்தத் திருத்தலத்திற்குச் செல்ல வேண்டும்.