பதக்க வீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் விமானப் பயணம் இலவசம்
பிரபல தனியார் விமான நிறுவனம் பாரா ஒலிம்பிக் மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைக்கள் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய முடியும் எனஅறிவித்துள்ளது.
பிரேசிலில் ரியோஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, தற்போது பிரேசிலில் ஊனமுற்றோருக்கான பாராஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இவ்விரு ஒலிம்பிக்போட்டிகளிலும் இந்தியா சார்பில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும்இலவச பயணமாகவும், வெள்ளி பதக்கம் வென்றவர்கள் 5 வருடம் இலவசமாகவும், வெண்கல பதக்கம்வென்றவர்கள் மூன்று வருடம் இலவசமாக AirAsia விமானத்தில் பயணம் செய்து கொள்ளலாம் என AirAsia விமானத்தின் CEO அமர் அப்ரால் நேற்று அறிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் சிந்து வெள்ளியும், சாக்ஷி மாலிக் வெண்கலமும் வென்றுள்ளனர்.
பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் முடிவடையாததால், முடிந்த பின்னர் பதக்கம் பெற்ற மொத்த இந்திய வீரர்களின் விவரம் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.