மெனிக்கே மகே ஹித்தே; பாடல் உலகம் முழுவதும் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவின் சூழ்ச்சி- நளின் டி சில்வாவின் கருத்து
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தையும், சிங்கள மக்களையும் வென்றெடுப்பதற்காக இந்தியா மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறதாக சிங்கள தேசியவாதியான பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இளம் சிங்கள பாடகி யோஹானி டி சில்வாவின் “மெனிக்கே மகே ஹித்தே” என்ற பாடல் உலகம் முழுவதும் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவின் சூழ்ச்சியான வேலையாக இருக்கலாம் எனவும் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு இந்தியா மீதுள்ள அதிருப்தியை போக்கு வதற்காக இந்தியா, யோஹானி டி சில்வாவை தெரிவு செய்துள்ளது.
இலங்கையில் இதுவரை பிரபலமாகாத அந்த பாடலுக்குத் திட்டமிட்ட அடிப்படையில் பிரச்சாரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளனர், அமி தாப்பச்சன் மாத்திரமல்ல, சல்மான்கான் போன்றோரும் இதற்கு உதவி வருகின்றனர்.
இந்தியத் திரை கலைஞர்கள் தன்னிச்சையாக உதவவில்லை. சிலர் அவர்களை வழிநடத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா என்பது இலங்கையை விட மிகவும் திட்டமிட்டு வேலை செய்யக் கூடிய நாடு. அந்நாட்டின் நிர்வாக அதிகாரிகள், உளவுப் பிரிவுகள் என்பன வேலை செய்கின்றன எனவும் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.
அந்த அதிருப்தியைப் போக்க இந்தியா இலங்கை பாடகியைத் தெரிவு செய்துள்ளது. அந்த பாடகி, முக்கிய பிரமுகர் ஒருவரின் மகள் என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம்.
இலங்கையில் கூட பிரபலமாக இல்லாத பாடலுக்கு இந்தியாவில் குறித்த பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விளம்பரப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]