சுற்றுலா வீசா ஊடாக டுபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி தலா 9 இலட்ச ரூபாவை பெற்று மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்த தம்பதியரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
டுபாயில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக சுற்றுலா வீசா ஊடாக இளைஞர்களை அனுப்புவதாக கூறி ஒருவரிடம் தலா 9 இலட்ச ரூபாவை பெற்று மோசடி வேலையைச் செய்து வந்த கணவன்,மனைவி இருவரையும் கடந்த 18 ஆம் திகதியன்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இவ்விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய அவரின் உத்தரவின் பேரில் , இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் ஆலோசனையின்படி விசாரணைப் பிரிவு உதவிப் பொறுப்பு அதிகாரி வழிநடத்தலின் கீழ் இந்த மோசடி தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன் பின்னர் இந்த தம்பதியினர் குருணாகல் பதில் மஜிஸ்ட்ரேட்டிடம் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, கடும் நிபந்தனைகளுடனான பிணை வழங்கியிருந்தபோதிலும், அந்த நிபந்தனைகளை அவர்களால் செயற்படுத்த முடியாத பட்சத்தில் 2021.10.29 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த தம்பதியினர் வெளிநாட்டுக்கு பயணங்களை மேற்கொள்ளவும் மஜிஸ்டிரேட் நீதிமன்றால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]