பெண்கள், தங்கள் கழுத்தில் நகைகளை அணிந்து கொள்வதால் அவர்களுக்கு அதிக, ‘நேர்மறை சக்தி’ கிடைக்கின்றது. கழுத்தில் நகைகள் அணிவதால் அவை உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன.
நகைகள் அணிவதால் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப்புள்ளிகள் தூண்டப்பட்டு, ஒவ்வொரு உறுப்புகளும் பராமரிக்கப்படுகின்றது என்பது பழங்காலத்தொட்டே நம்மிடையே இருந்து வரும் நம்பிக்கையாகும். அதிலும் கழுத்தில் நகைகள் அணிவதால் அவை உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன. பெண்கள், தங்கள் கழுத்தில் நகைகளை அணிந்து கொள்வதால் அவர்களுக்கு அதிக, ‘நேர்மறை சக்தி’ கிடைக்கின்றது.
* கண்டசரம்: வைரக்கற்கள் பதிக்கப்பட்ட கழுத்தை ஒட்டி அணிவிக்கப்படும் ஒரு வகையான கழுத்து அணிகலன்.
* உட்கத்துச்சரடு: கழுத்தை ஒட்டி அணியும் ஷார்ட் செயின்களே இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவற்றில் மிக மெல்லியதாக இருப்பவை இளவயது ஆண், பெண்களால் மிகவும் விரும்பி அணியப்படும் தங்கச்சங்கிலிகள் ஆகும். அதேபோல், நடுத்தர அளவில் வரும் செயின்களும், பட்டையாக வரும் செயின்களும் கூட ஆண் மற்றும் பெண்களால் விரும்பி அணிப்படுகின்றது.
* நெக்லஸ்: முழுவதும் தங்கத்தால் ஆனவை. கற்கள் பதித்தவை, முத்து, பவளம் பதித்தவை, வைரம் மற்றும் பிளாட்டின நெக்லஸ்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். நெக்லஸ்களில் பலவிதமான டிசைன்கள் உள்ளன. இதிலும் பட்டையாக மட்டுமல்லாமல் நடுத்தர அளவிலும் நெக்லஸ்கள் வருகின்றன. கற்கள் பதித்த நெக்லஸ்களின் அடிப்புறம் கற்களை மூடியவாறு வருபவை ‘க்ளோஸ்டு’ வகையாகும். இவ்வகை நெக்லஸ்களில் தங்கம் அதிக அளவில் உபயோகப் படுத்துவதால் இவற்றின் எடை அதிகமாக இருக்கும்.
‘ஓபன்’ வகை நெக்லஸ்களில் பதிக்கப்பட்டிருக்கும் கற்களை அடிப்புறம் மூடாமல் வைத்திருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
நெக்லஸ்களில் குறைந்த தங்கத்தில் அதிக மாடல்களும், டிசைன்களும் இப்பொழுது வந்துவிட்டன. வைர மற்றும் பிளாட்டின நெக்லஸ்கள் பெரும்பாலும் மெல்லிய மற்றும் நடுத்தர அளவிலேயே வருகின்றன. இதில் பெங்காலி மாடல், வார்ப்பு (கேஸ்டிங்) மாடல், கல்கத்தா மாடல், பாம்பே மாடல், டர்கிஷ்மாடல் என பல மாடல்களில் நெக்லஸ்கள் தனிச்சிறப்புகளுடன் வருகின்றன. இதில் மேக்னட் நெக்லஸ் மாடல்கள் பார்ப்பதற்கு பென்டென்ட்டுகளுடன் வரும் குட்டைச் செயின்கள் போல இருந்தாலும் பென்டென்ட்டுகளை விரித்து நெக்லஸ் போல மாற்ற முடியும். இவற்றை கழுத்தை ஒட்டியும் அணிந்து கொள்ளலாம்.
* பாரம்பரிய அட்டிகைகள்: பெரும்பாலும் பட்டையாக கழுத்தை ஒட்டி வரும் இவ்வகை அட்டிகைகளில் பதக்கங்கள் கற்கள் வைத்தவையாகவே இருக்கும். பிளெயின் பதக்கங்கள் வைத்த அட்டிகைகள் குறைந்த அளவிலேயே அணியப்படுகின்றன. பாரம்பரிய அட்டிகைகள் மட்டுமல்லாது இப்பொழுது ஃபேன்ஸி அட்டிகைகளும் வந்துவிட்டன. குழந்தைகள் அணிவது போல் வரும் அட்டிககைள் மிகவும் அழகான சின்ன டாலர்களுடன் வருகின்றன.
* சோக்கர்கள்: கழுத்தில் நெருக்கமாக அணியும் கழுத்தணி என்று இதைச் சொல்லலாம். சோக்கர்களின் பூர்வீகம் வெஸ்டர்ன் என்றாலும் இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றார் போல் உருமாற்றப்பட்டுள்ளது. குந்தன், போல்கி மாடல்கள் மட்டுமல்லாது முத்துக்கள் பதித்த சோக்கர்களும் மிகவும் ஆடம்பரமான தோற்றத்தைத் தருகின்றன. கற்கள்பதித்து வரும் சோக்கர்கள் அடுக்கு மாடல்களில் வருகின்றன இவற்றை பாரம்பரிய ஆடைகள் மட்டுமல்லாது வெஸ்டர்ன் ஆடைகளுடனும் அணியலாம். எடை குறைவாகவும் அதே நேரத்தில பார்வையாகவும் சோக்கர்கள் கிடைப்பது கூடுதல் சிறப்பு. கழுத்தில் இந்த ஒரு நகை அணிந்தாலே அவை நிறைவாக இருக்கும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]