2021 டி-20 உலகக் கிண்ண போட்டிகளில் விளையாட ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள தசூன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணி, தனது முதல் பயிற்சி ஆட்டத்தை இன்று பங்களாதேஷுக்கு எதிராக ஆடுகின்றது.
இந்த ஆட்டம் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் இன்று மாலை ஆரம்பமாகவுள்ளது.
உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு ஓமானுக்கு எதிரான இரண்டு பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்ற இலங்கை அணி அபுதாபிக்கு நேற்றுமுன்தினம் (ஒக்டோபர் 10) வந்தது.
தென்னாபிரிக்காவுடனான தொடருக்கு பின்னர் ஐ.பி.எல். போட்டிக்கு புறப்பட்ட வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் இதன்போது அணியில் இணைந்து கொண்டனர்.
இதற்கிடையில் இலங்கை அணியினர் எதிர்கொள்ளும் மிக கடுமையான பிரச்சினை என்னவென்றால் அபுதாபியின் வெப்பமான வானிலை.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தினேஷ் சந்திமால்,
நாங்கள் நேற்று (ஒக்டோபர் 10) பிற்பகல் அபுதாபிக்கு வந்தோம். இங்குள்ள ஆடுகளம் பற்றி எங்களுக்கு இன்னும் எதுவும் தெரியாது. இன்று இரவு (ஒக்டோபர் 11) பயிற்சிக்குப் பிறகு நாங்கள் அது தொடர்பில் ஒரு தெளிவினை பெற வேண்டும் என்று கூறினார்.
மேலும் பேசிய சந்திமால், ஒவ்வொரு போட்டிக்கும் அணிக்கு ஒரு திட்டம் உள்ளது, அந்த நாளில் அந்த திட்டத்தை சரியாக செயல்படுத்த முடிந்தால், அவர்கள் போட்டியில் நீண்ட தூரம் வரை செல்ல முடியும் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]