வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து நியமனக்கடிதத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை நண்பகலளவில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவும் கலந்து கொண்டிருந்தார்.
முன்னதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த ஜீவன் தியாகராஜா கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி முதல் கடமைகளைப் பொறுப்பேற்று செயற்பட்டிருந்தார்.
இந்நிலையில் அப்பதவியிலிருந்து இராஜிநாமா செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுதந்தரவால் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கூறப்பட்டதோடு வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ள விடயமும் தெரிவிக்கப்பட்டிருந்து.
இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவியை துறந்திருந்த ஜீவன் தியாகராஜா தற்போது வடக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அடுத்தவாரமளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]