சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 115 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸாரினால் ஒரு வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
2020 ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக மொத்தம் 80,475 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் நேற்றைய தினம் உள் நுழைய முயன்ற 798 வாகனங்களில் 1393 நபர்களும், வெளியேற முயன்ற 543 வாகனங்களில் பயணித்த 979 பேரும் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களில் உரிய காரணமின்றி 166 வாகனங்களில் பயணித்த 327 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]