சிவனின் மூல மந்திரத்தை உச்சரித்து வழிபடுபவர்களுக்கு தீவினைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் ஏற்படும். தினமும் இந்த மந்திரத்தை ஜபிக்க இயலாதவர்கள் திங்கட்கிழமையில் ஜபிப்பது அவசியம்.
சிவ சிவ என்கிலர் தீவினை யாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!
திருமூலர் அருளிய இந்த மந்திரமானது சிவன் மூலமந்திரமாக போற்றப்படுகிறது. நீண்டகால துன்பம் உடையவர்கள், கட்டுக்கடங்காத பண பிரச்சனை உடையவர்கள், தீராத நோய் உடையவர்கள், மன நிம்மதி இன்றி தவிப்பவர்கள் இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வர தீராத பிரச்சனைகள் யாவும் விரைவில் தீரும். தினமும் மந்திரத்தை ஜபிக்க இயலாதவர்கள் திங்கட்கிழமையில் ஜபிப்பது அவசியம்.
சிவன் மூல மந்திரம் பலன்கள்
* சிவனின் மூல மந்திரத்தை உச்சரித்து வழிபடுபவர்களுக்கு தீவினைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் ஏற்படும்.
* பித்ரு தோஷங்கள் நீங்கும்.
* குல சாபங்கள், பூர்வ ஜென்ம பாவ வினைகள் நீங்கப் பெறுவார்கள்.
* வீட்டில் பணமுடைகள் நீங்கி செல்வம் பெருகும்.
* நோய்கள் அனைத்தும் விரைவில் தீரும்.
* உடல் நலமும் சிந்தனைத் தெளிவும் உண்டாகும்.
* எதிரிகளால் எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் காக்கும்.
* திருமணம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]