2021 டி-20 உலகக் கிண்ணத் தொடர் மற்றும் ஓமானுடனான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடுவதற்காக தசூன் சானக்க தலைமையிலான இலங்கை அணி நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் ஒக்டோபர் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் இருபதுக்கு ; 20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக இலங்கை அணி, ஓமான் கிரிக்கெட் அணியுடன் இரு டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
அதன்படி இலங்கை ஓமானனுடன் தனது முதல் போட்டியை ஒக்டோபர் 07 ஆம் திகதியும், இரண்டாவது போட்டியை 09 ஆம் திதியும் விளையாடுகிறது.
போட்டிகளின் பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இலங்கை அணி திரும்பும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]