சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘டாக்டர்’ படத்தை விளம்பரப்படுத்துவதற்காக, பட தயாரிப்பு நிறுவனம் தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமான ராட்சத பலூனை பறக்கவிட்டு, ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறது.
‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில், அவருடன் நடிகை பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, வினய், இளவரசு, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு பட மாளிகை திறக்கப்பட்டு, மக்களிடம் வரவேற்பு கிடைத்து வருவதால் இப்படத்தின் வெளியீட்டு திகதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அத்துடன் இப்படத்தின் முன்னோட்டமும் வெளியானது.
இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டு இருக்கின்றன.
கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் ‘டாக்டர்’ ஒக்டோபர் 9 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘கபாலி’ படத்திற்கு பிறகு,‘ டாக்டர்’ படத்தின் விளம்பரம் ராட்சத பலூனில் பறக்கவிடப்பட்டதால், படத்தின் வெற்றியும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]