ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் நாடு தழுவிய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை ஒக்டோபர் முதலாம் திகதி நீக்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.
அதன்படி இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படும்.
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் விரைவில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என்றும் கொவிட் -19 தொற்று நோய் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாடடு மையத்தின் தலைவரம், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]