‘புரட்சி தளபதி’ விஷாலுடன் ‘இளைய திலகம்’ பிரபு மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நடிகர்கள் நந்தா மற்றும் ரமணா தயாரிப்பாளராக மாறி முதன்முறையாக தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் ‘புரட்சித்தளபதி’ விஷால் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்கிறார். அறிமுக இயக்குனர் வினோத் குமார் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் இளைய திலகம் பிரபு நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. எம். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிப்பதற்காக அப்பட இயக்குனர் மணிரத்னம் வேண்டுகோளின்படி உடல் எடையை 20 கிலோ வரை இயற்கையான முறையில் குறைத்து அழகாகத் தோற்றமளிக்கும் மூத்த நடிகர் பிரபு இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடிக்கிறார்.
‘தாமிரபரணி’, ‘ஆம்பள’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷாலுடன் ‘இளைய திலகம்’ பிரபு இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு தற்போது எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]