இங்கிலாந்து சகலதுறை ஆட்டக்காரரான மொய்ன் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவிக்க உள்ளார் என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் அவர் ஏற்கனவே அணித் தலைவர் ஜோ ரூட் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஆகியோருக்கு தகவல்கள் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.
34 வயதான அவர் 64 டெஸ்ட் போட்டிகளில் 28.29 சராசரியாக 2,914 ஓட்டங்களை எடுத்துள்ளார் மற்றும் பந்து வீச்சில் தனது ஆஃப் ஸ்பின் மூலம் 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2019 ஆஷஸ் முதல் சிறிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடிய மொய்ன் அலி, இந்தியாவுக்கு எதிராக உள்ளூரில் ஆரம்பமான கோடைகால தொடருக்காக இங்கிலாந்து அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் ஆஷஸ் டெஸ்ட் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]