பாஞ்சாலி கொடுத்த பாத்திரத்தில் இருந்து ஒரு சிறு கீரையினை உண்டதினால், துர்வாசர் மற்றும் அவருடைய எண்ணற்ற சிஷ்யர்களின் வயிற்றுப் பசி நீங்கியது.
ஸ்ரீகிருஷ்ணர், கோபிகைகளின் மேல் வைத்திருந்த தீராத அன்பின் காரணமாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று வெண்ணையினைத் திருடி ஆசை தீர உண்பார். ஆனால் அவர் உண்மையிலேயே திருடியது தனது பக்தர்களின் மனங்களில் உள்ள கெட்ட குணங்களைத் தான். பின்னர் அம்மனங்களைத் தனது தெய்வீகச் சக்தியால் நிரப்பி விடுவார்.
தனது பாலபருவத்திலே, கோபிகைகள் வைத்திருந்த வெண்ணெயைத் திருடித் தின்று ராச லீலைகளை நடத்தினார். இதனைக் கோபிகைகளும் வெகுவாக ரசித்தனர். அவர்களது வீட்டிற்கு ஸ்ரீகிருஷ்ணன் வந்திருந்து வெண்ணெயை உண்ண வேண்டுமென்று ஆசை கொண்டார்கள்.
அவர் உண்மையில் திருடியது தனது பக்தர்களின் இதயங்களைத் தான். அதன் பயனாக அவர்கள் உவகை மறந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே அதிதீவிர பக்தி பூண்டு, அவரது பாதாரவிந்தத்தையே நினைத்துக் கொண்டிருந்தனர். அதனால் அவர்கள் எல்லையற்ற பேரானந்தத்தை அடைந்தனர்.
பாஞ்சாலி கொடுத்த பாத்திரத்தில் இருந்து ஒரு சிறு கீரையினை உண்டதினால், துர்வாசர் மற்றும் அவருடைய எண்ணற்ற சிஷ்யர்களின் வயிற்றுப் பசி நீங்கியது. ஸ்ரீகிருஷ்ணரின் தனிப்பட்ட ஆத்மா, உலக உயிர்களிலெல்லாம் வாசம் செய்கின்றது என்பது இதன் மூலம் தெளிவாக விளங்குகின்றது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]