தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல (Keheliya Rambukwella) தகவல் வெளியிட்டுள்ளார்.
அதன்படி சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாவலப்பிட்டியில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறும் கலந்துரையாடலில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து ஊரடங்கானது தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வந்த நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]