கனடா மற்றும் மெக்ஸிகோ உடனான பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா மேலும் ஒரு மாத்திற்கு நீட்டிப்பதாக திங்களன்று அறிவித்தது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, அமெரிக்கா அதன் சர்வதேச நில எல்லையை பகிரும் கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு அசாதாரண பயணக் கட்டுப்பாடுகளை கடந்த மார்ச் 2020-ல் வித்தித்து.
அந்த கட்டுப்பாடுகளை அமேரிக்கா, தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நீட்டித்துவந்தது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறையை தொடங்கியதை அடுத்து, கனடா ஆகஸ்ட் 9-ஆம் திகதி முதல் அத்தியாவசியமற்ற பயணங்களாக இருப்பினும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க பார்வையாளர்களை அனுமதிக்கத் தொடங்கியது.
இந்நிலையில், வெள்ளை மாளிகை திங்கட்கிழமை வெளியிட்ட அறியகையில், இந்தியா, பிரித்தானியா, சீனா, பிரேசில் என பல்வேறு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடுகளை தளர்த்தி, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து பயணிகளும் வரும் நவம்பர் மாதம் முதல் சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு, அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தது.
அனால், சர்வதேச எல்லையை பகிரும் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயங் கட்டுப்பாடுகள், தொடர்ந்து மேலும் ஒரு மாத்திற்கு, ஆக்டொபர் 21-ஆம் திகதி வரை நீட்டிப்பதாக அமேரிக்கா அறிவித்துள்ளது.