செவ்வாயின் வியத்தகு புகைப்படங்கள் வெளியானது
செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா என்பது தொடர்பிலும், ஏனைய பௌதிக வளங்கள் தொடர்பிலும் ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட விண்கலமே கியூரியோசிட்டி ரோவர்.
இந்த விண்கலமானது நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு தரித்து நின்று ஆயிரக்கணக்கான புகைப்படங்களை எடுத்து அனுப்பிக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் தற்போது விஞ்ஞானிகள் எதிர்பாராத வகையில் முதன் முறையாக மலைக் குன்று ஒன்றினையும், அங்கு சிதைவடைந்திருக்கும் பாறைகளையும் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
இக் குன்றுகள் செவ்வாய் கிரகத்தின் தென்மேற்கு பகுதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவை 2 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோற்றம் பெற்றிருக்கலாம் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறெனினும் இப்பாறைகள் சிதைவடைந்துள்ள நிலையை பார்க்கும்போது காலநிலை மாற்றங்கள் உட்பட மண் அரிப்பும் காரணமாக இருக்கலாம் என ஊகம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு மண் அரிப்பு ஏற்படுவதற்கு நீர் முக்கிய காரணமாக இருந்துக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.