நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதால் கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது என்று விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் கடந்த இரு மாதங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டிருந்தது. வைத்தியசாலைகளில் இடமிருக்கவில்லை.
ஒட்சிசன் வழக்குவதிலும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது. தற்போது இந்நிலைமை மாறியுள்ளது. வைத்தியசாலைகளில் இடம் உள்ளன.
இந்நிலைமையை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக முழுமையாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக இரண்டு தடுப்பூசிகள் பெற்ற பின்னர்கூட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” – என்றார்.