உலகை காட்டிய உத்தமரும் நீரோ
தாயின் தாலாட்டில் முதலடி உமக்கானதோ
பிணியோடு வந்தவரை பணிவோடு வென்றீரே-உம்
பணி கண்டு கை தொழாதோர் எவருமுண்டோ
பிரம்மனும் பிரமிக்கும் அரிய மானுடம்
நீரே
பாமரன் கண்டதில்லை அந்த பரமனை
அவனருளால் அடைந்தான் நேசந்தனை – உம்
பாசம் கண்டு பற்றிய நோயும் நொடியில்
பறந்திடும்
யமனின் பாசக்கயிருக்கே பயமூடிய
சிவன் மகள் தானோ
தொலைதூரம் சென்றவனையும் வென்று
அழைத்தாய்
உம் வரவுகண்டு வையகமே தலைவணங்கும்
தாயே.
கேசுதன்