2020ல் இலங்கை ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில்…
உலகில் உள்ள பல நாடுகள் மீது தாம் தாக்குதல் மேற்கொள்ளவுள்ள உள்ளதாக இந்ததீவிரவாத அமைப்பானது பகிரங்கமாக அறிவித்து வருகின்றது.
அதில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எனினும் குறித்த தீவிரவாத அமைப்பு தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு பிரிவு கடும் அவதானம் செலுத்தி வருவது சுட்டிக்காட்டத்தக்கது.
சிரியாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் இந்த தீவிரவாத அமைப்பானது இதுவரை பலஐரோப்பிய நாடுகள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில்,பல மத்திய கிழக்குநாடுகள் ஐ.எஸ். தீவிரவாத தாக்குதலில் இருந்து தமது நாடுகளை பாதுகாக்க கடும்பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது.
மேலும் நிலையற்ற அரசியல் நிலைமைகளைக் கொண்டுள்ள அபிவிருத்தி அடைந்துவரும்,அபிவிருத்தி அடைந்த நாடுகள் மீது இந்த அமைப்பு தாக்குதலை மேற்கொள்ளதிட்டமிட்டுள்ள நிலையில்,கடந்த கால அரசியல் ஆய்வுகளில் இந்த தீவிரவாத அமைப்பின்தாக்குதல் சம்பவங்களானது கடும் வாதப்பிரதிவாதங்களை உலகநாடுகளில் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.