தமிழ் சினிமாவின் நகைச்சுவை அரசன் வைகைப்புயல் வடிவேலு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் நடிக்க முடியாமல் அவதிப்பட்ட வடிவேலு தற்போது அனைத்து பிரச்சனைகளும் நீங்கி மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதனையடுத்து ரீ என்ட்ரி ஆகும் வடிவேலு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1991ஆம் ஆண்டு ’என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தில் ராஜ்கிரண் படத்தில் வடிவேலு திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த வடிவேலுவுக்கு திருப்புமுனை கொடுத்த படம் என்றால் அது ஷங்கர் இயக்கிய ’காதலன்’ என்று கூறலாம். இந்த படத்தில் அவர் வசந்த் என்ற கேரக்டரில் பிரபுதேவாவின் நண்பராக நடித்தது மட்டுமின்றி டான்ஸ் ஆடியும் கலக்கியிருப்பார். இதன் பிறகு வடிவேலு நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வடிவேலு இல்லாத திரைப்படமே இல்லை என்ற ஒரு நிலை கடந்த 2000, 2010ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமான திரைப்படங்களில் நடித்த வடிவேலு கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை அடுத்து திரையுலகினர்களால் வடிவேலு ஓரங்கட்டப்பட்டார். மேலும் வடிவேலு சில திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் கூறப்பட்டதை அடுத்து கடந்த 10 ஆண்டுகளாக அவருக்கு ரெட் கார்ட் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த ரெட் கார்ட் தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்தபிறகு நீக்கப்பட்டுள்ளது என்பதும் தற்போது மீண்டும் ரீ எண்ட்ரி ஆகியுள்ள வடிவேலு இன்னும் நிறைய திரைப்படங்களில் நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
வடிவேலு கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் இல்லாமல் இருந்தாலும் அவரைப் பற்றிய மீம்ஸ் வராத நாளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சமூக வலைதளங்களில் எந்த மீம்ஸ் வந்தாலும் அது வடிவேலின் வசனம் குறித்த மீம்ஸ் ஆகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அந்த அளவில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்றும் நீ முதலில் இணைந்து வாழ்ந்து வரும் வடிவேலு அவர்களுக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.